எரியாத தெரு மின் விளக்கு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 21 June 2024

எரியாத தெரு மின் விளக்கு


 எரியாத தெரு மின் விளக்கு


தஞ்சாவூர் மாநகரத்தில் ராமகிருஷ்ண நகரில் தெரு மின் விளக்கு எரியாமல் இருப்பதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர்.


தஞ்சாவூர் மாநகராட்சி 6-வது வார்டு  ராமகிருஷ்ண நகரில் 700க்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  மாநகராட்சியில் தெரு மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிடைகின்றனர். ராமகிருஷ்ண நகர் ஐந்து தெருக்கள்  உள்ளது. இதில் பல்வேறு இடங்களில் தெரு மின் விளக்குகள் எரியாமல் இரவு 9 மணிக்கு மேல் இருள் சூழ்ந்த தெருக்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.


"ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் வீடுகளில் எரியும் மின் விளக்கின் வெளிச்சத்தை பெற்று இத்தெருக்கள் பிரகாசம் அடைகிறது.  இரவு 9 மணிக்கு பிறகு அனைவரும் உறங்க செல்லும்போது, வீட்டு விளக்கை அணைக்கும் நேரத்தில் தெருக்களில் இருள் சூழ்ந்திருப்பதால், அதிக அளவில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன


அனைத்து தெருக்களிலும்  மின் விளக்குகள் இருக்கிறது. ஆனால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தெருவிளக்குகள் இருந்தும், வெளிச்சம் பெறாத ராமகிருஷ்ண நகராக  இருந்து வருகின்றன."


."இது குறித்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தான் மக்களின் பிரதிநிதியாக கேள்வி கேட்பார் என்பதால் அவரது வீட்டின் அருகில் மட்டும் மின் விளக்குகளை மின்துறையினர் சரி செய்து விடுகின்றனர். மக்களிடம் வரிப்பணம் வசூலிக்கும்போது சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம், வரிப்பணம் வாங்கும் நீங்கள், மின் விளக்கை சரி செய்யுங்கள் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


÷ஒவ்வொரு பகுதியிலும் வரி வசூலிப்பவர்கள், மக்கள் நம்பும்படியான காரணத்தை கூறி சமாளித்து, வரி வசூல் செய்து வருகின்றனர். மின் விளக்குகள். கடந்த ஓராண்டு மேலாக எரியாமல் இருப்பதால், பொது மக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில், விளக்குகள் இல்லாததால் திருடர்கள் நடமாட்டத்தால் பயப்பட வேண்டியுள்ளது. எனவே, மின் விளக்குகளை அமைக்க, மாநகராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad