25 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் இல்லாமல் 1 குடும்பம் தவிக்கிறது: தமிழக அரசு கவனிக்குமா? - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 22 June 2024

25 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் இல்லாமல் 1 குடும்பம் தவிக்கிறது: தமிழக அரசு கவனிக்குமா?

 


25 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் இல்லாமல் 1 குடும்பம் தவிக்கிறது: தமிழக அரசு கவனிக்குமா?


தஞ்சாவூர் மாவட்டம்  மேலவெளி ஊராட்சியில்  25 ஆண்டு காலமாக மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் அகதிகளைப் போன்று ஒரு குடும்பம்  வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக போராடியும் பலனளிக்காததால் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியை உடனே நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கண்ணீர் மல்க அக்குடும்பத்தினர் அறிவித்த சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்தது.


தஞ்சாவூர் மாவட்டம் மேலவெளி ஊராட்சியில் ஜெபமாலைபுரம் புதுத் தெருவை சேர்ந்தவர் பொய்யாமணி (45). கூலி வேலை செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தாய் வேம்பு, மனைவி அன்பரசி, மகன்கள் அபிஷேக், அழகேஸ்வரன்,அனீஸ் குமார்,சாமுண்டீஸ்வரன், மகள்கள்.மனீஷா ,லோகேஸ்வரி ஆகியோர் 9 ஒன்பது பேரும்  பொய்யாமணி வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.


தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தில் மாநில பொதுச் செயலாளராக பொய்யாமணி பொறுப்பில் உள்ளார்.இவர் நிருபர்களிடம் பேசியதாவது; ஜெபமாலைபுரம் புதுத்தெருவில் அரசு தந்த நத்தம் புறம்போக்கு நிலத்தை  25க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்..என்னைத் தவிர மற்ற அனைத்து குடும்பத்திற்கும் மின்சார வசதி இருக்கிறது.எனது வீட்டில் மின்சாரம் இல்லாமல் எனது பிள்ளைகள் படிக்க முடியாமல் மனதளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்


அவரது மனைவிஅன்பரசி பேசுகையில் எங்களுக்கு  குடிநீர் இணைப்பும் இல்லை, மின்சார வசதியும் இல்லாமல். தினந்தோறும் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் அலைந்து தண்ணீர் எடுத்து வரவேண்டும். அதேபோன்று மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் கொசுக்கடியிலும், விஷ பூச்சிகள் கடியிலும் வாழ்ந்து வருகின்றனர். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சாரத் துறைக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.


எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு, குடிநீர் மற்றும் மின்சார வசதி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது பார்ப்பவர்களை திகைக்க வைத்தது

No comments:

Post a Comment

Post Top Ad