காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பேராவூரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 17 June 2024

காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பேராவூரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


 காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பேராவூரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். தமிழகத்திற்கு உரிய பங்கு தண்ணீரை ஒன்றிய அரசு பெற்று தர வேண்டும். டெல்டா விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெரியார் சிலை அருகில் இன்று திங்கள்கிழமை காலை 11 மணிக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழுக்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேதுபாவாசத்திரம் விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கருப்பையன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வாசு கண்டன உரையாற்றினார். இதில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad