இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 16 June 2024

இலவச கண் சிகிச்சை முகாம்

 


இலவச கண் சிகிச்சை முகாம்


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்  அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய இணைந்து நடத்தும் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை கொட்டையூர் வள்ளலார் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று  பொது மக்களுக்கு கண்களை பரிசோதித்தனா். சுற்றுப்புற கிராமங்களைச்  சேர்ந்த 371பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 36 நபர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது . இதில் 126 பேர் கண் புரை கண்டறியப்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.


  முகாமுக்கு காமாட்சி ஜோசியர் தெருவில் அமைந்துள்ள சிட்டி யூனியன் பேங்க் கிளை மேலாளர் துவக்கி வைத்து  நிதி உதவி அளித்து கலந்து கொண்டு  சிறப்பித்தவர்களுக்கும் சேவையாற்றிய அரிமாக்களுக்கும் லியோ பிள்ளைகளுக்கும் முகாம் நடத்த இடமளித்த வள்ளலார் கல்வி குழுமத்திற்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என லயன் கண்ணன் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad