பேராவூரணியில் 11 வயது சிறுமி சர்வாங்காசனத்தில் ,இடைவிடாது 30 நிமிடங்கள் 37 விநாடிகள் இருந்து உலக சாதனை - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 22 June 2024

பேராவூரணியில் 11 வயது சிறுமி சர்வாங்காசனத்தில் ,இடைவிடாது 30 நிமிடங்கள் 37 விநாடிகள் இருந்து உலக சாதனை

 


பேராவூரணியில் 11 வயது சிறுமி சர்வாங்காசனத்தில்  ,இடைவிடாது 30 நிமிடங்கள் 37 விநாடிகள் இருந்து உலக சாதனை


பேராவூரணியில் 11 வயது சிறுமி சர்வாங்காசனத்தில் 30 நிமிடங்கள் 37 விநாடிகள் இருந்து உலக சாதனை படைத்தார் . பேராவூரணி திருமூலர் யோகா நிலைய அரங்கில்  உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யோகா நிலைய மாணவியான  பாலகணேசன் - செல்வமணி தம்பதியின், 7 ஆம் வகுப்பு படிக்கும் ஹாசினி (11) என்ற மாணவி  ஆசனங்களின் ராணி எனப்படும் சர்வாங்காசனத்தில்  30 நிமிடம் 37வினாடிகள் இருந்து  உலக சாதனை படைத்தார். ஏற்கனவே 11 வயதில் 11 நிமிடங்கள் மட்டுமே உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து, இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் முதன்மை நடுவர் நாகராஜன், நடுவர் சீதாலட்சுமி ஆகியோர் சாதனையை உறுதி செய்து, டோய் ஃபெஸ்ட் நிறுவனர் நிர்மல்ராஜ் முன்னிலையில் பதக்கம் மற்றும் சான்றிதழ்  வழங்கினர். சாதனை படைத்த சிறுமியை டாக்டர் நீலகண்டன் ,சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் வக்கீல் அருள் நம்பி  வர்த்தக கழகத் தலைவர் ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு துணை தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, ஏஷியன்  முஸ்கீர், ஐயப்பா சேவா சமாஜம் மாநில இணை பொதுச் செயலாளர் கமலா நீலகண்டன், 


உலக சாதனையாளர்கள் தெட்சிணாமூர்த்தி, மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்  திருமூலர் யோகா நிலையம் நிறுவனர் யோகி விமல் 40 நிமிடங்கள் சிரசாசனம் இருந்து  ஏற்கனவே படைத்த உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள்  வழங்கப்பட்டன. 

   

பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad