அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 15 June 2024

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது

 


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்க மாநில நிரந்தர தலைவருமான ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ம் ஆண்டு கபடி திருவிழா பிகே ஸ்போர்ட்ஸ் மற்றும் அரியலூர் மாவட்ட அமைச்சூர் கபாடி கழகம் சார்பில் நடைபெற்றது இதில் வசந்தமணி செல்ல ரவி மாவட்ட  கவுன்சிலர் பாமக செந்துறை, சிவசங்கர் பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் செந்துறை தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார்கள் 


மூன்று நாட்களாக நடைபெறும் இந்த கபடி போட்டியில் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன போட்டியின் முதல் நாளான நேற்று மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது.


முன்னதாக சிவன் கோவிலில் இருந்து கபடி வீரர்- வீராங்கனைகளை  மேளதாளங்களுடன் ஊர்வலமாக விளையாட்டு திடலுக்கு அழைத்துச் சென்றனர் இதனை தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மாவட்ட தலைவர் சின்னமணி தொடங்கி வைத்தார் இதில் தமிழ்த்தென்றல் கல்பனாதேவி ரேவதி  விழா ஒருங்கிணைப்பாளர் மணி மற்றும்கருணாநிதி செல்வம் மணி ராஜசேகர் சாமி தமிழ்மணி நடராஜன் ராஜசேகர் பரமசிவம் இளங்கோவன் மோகன் ரமேஷ் இளையராஜா சக்திவேல்உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad