செந்துறை அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 22 May 2024

செந்துறை அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.


செந்துறை அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயிலில் அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர், செல்லியம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு திருவிழா கொண்டாடுவது என ஊர் பொதுமக்கள் நாட்டார்களால் தீர்மானித்து கடந்த மாதம் 13/05/2024  ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா ஒவ்வொரு நாளும் காலை , மாலை வேலைகளில் தெய்வங்களின் வீதி உலா மேலக் கச்சேரி மற்றும் வானவேடிக்கை முழங்க பொதுமக்கள் தரிசனம் செய்து வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி புதன்கிழமை 


காலை 10 மணிக்கு திருத்தேர் வளம் வர தயாரானது மேலும் விவசாய பொருட்கள் முந்திரி, பலா, மா,இளநீர் போன்றவற்றை திருத்தேரில் கட்டியும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், செல்லியம்மன் ,மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். அதனை தொடர்ந்து சுற்று வட்டார பொதுமக்கள் ஒன்று கூடி கேரளா புகழ் சண்டை மேளம் முழங்க அரோகரா அரோகரா என்ற அருளோடு திருத்தேரை பொதுமக்கள்  வடம் பிடித்து இழுத்தனர்.மேலும் இந்த தேரானது செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் ஒரே தேரில் வலம் வருவது இவ்வூரில் மிக சிறப்பு வாய்ந்ததாகும். திருத்தேர் வீதிகளில் வலம் வரும்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முன்பு பொங்கல் வைத்து அம்மனை தரிசிப்பது மிக சிறப்பு  அதேபோன்று இவ்வூரில் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள அனைவரும் தேரை வடம்பிடித்து இழுத்து பத்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி கோவில் திருத்தேர் தனது நிலையை வந்தடைந்து தீபாரதனை நடைபெறும் பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வாங்கி சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad