திருவையாறு தமிழ் ஐயா வெளியிட்ட கலைஞர் நூறு நூல்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகம் கலைஞர் குறித்த நூறு ஆவணங்களைத் தயாரித்து வெளியீட்டுள்ளது. கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கையின் சார்பில் நூறு படைப்பாளர்கள் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞரின் வரலாறு, சாதனைகள், கடிதங்கள், கவிதைகள், தொல்காப்பியப்பூங்கா, குறளோவியம், சங்கத்தமிழ், சிறுகதை, வரலாற்று நாவல்கள், நாடகங்கள், திரைப்பட வசனங்கள், திரைப்பாடல்கள் போன்ற பல்வகைத் தலைப்புகளில் ஆய்வு செய்யப்பட்ட படைப்புகள் திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகத்தின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ளது. நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் புதிய பார்வையோடு ஆய்வுநோக்கில் நிழற்படங்களுடன் கூடிய நல்ல கட்டமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
கலைஞர் குறித்த ஆவணங்கள் அடங்கிய நூறு நூல்களையும் திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டக மேலாண்மை இயக்குநரும், திருவையாறு ஒளவைக் கோட்ட நிறுவநருமான முனைவர் மு.கலைவேந்தன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினார்
இந்நூறு நூல்களின் புத்தகக்காட்சி திருவையாறு ஒளவைக்கோட்டத்தில் அடுத்த ஜூன் மாதம் 3ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது

No comments:
Post a Comment