பேராவூரணி நகரக்கழகம் சார்பில் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு 2000 பேருக்கு பிரியாணி வழங்கி கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 14 May 2024

பேராவூரணி நகரக்கழகம் சார்பில் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு 2000 பேருக்கு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

.com/img/a/

 

IMG-20240514-WA0040

பேராவூரணி நகரக்கழகம் சார்பில் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு 2000 பேருக்கு பிரியாணி வழங்கி கொண்டாட்டம் 


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான,


எடப்பாடி கே.பழனிச்சாமி 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் 2000 பேருக்கு இனிப்பு, சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. 



அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சேகர் தலைமை வகித்து, பொதுமக்கள் கட்சியினருக்கு அன்னதானம் வழங்கினார். நகர கழகச் செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன் வரவேற்றார். கழக அமைப்பு செயலாளர் துரை.செந்தில், மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மலைஅய்யன்,  அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் கார்த்திகேயன், மாநில இலக்கிய துணைச் செயலாளர் சின்ன சாமிநாதன், திருவோணம் தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் மதியழகன், பேராவூரணி ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஒன்றியச் செயலாளர்கள் கே.எஸ்.அருணாச்சலம் (சேதுபாவாசத்திரம் தெற்கு), மலைமுருகேசன் (பட்டுக்கோட்டை வடக்கு), இளம்பெண்கள், இளம் ஆண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் அலெக்ஸ், முன்னாள் தொகுதிக்கழக இணைச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் குறிச்சி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் எஸ்.எம்.நீலகண்டன், பாசறை நகரச்செயலாளர் கணேசன், பெருமகளூர் பழனியப்பன், கே.எஸ்.வினோத், செல்வக்கிளி, கூத்தலிங்கம், ரா.க.செல்வகுமார், மீனவராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பண்ணவயல் சந்திரசேகரன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பார்த்திபன், பேராவூரணி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் எல்ஐசி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad