பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு பள்ளி 10 ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 11 May 2024

பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு பள்ளி 10 ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி


பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு பள்ளி 10 ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி


பேராவூரணி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு  அரசு உயர்நிலைப்பள்ளியில் 850 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.பத்தாம் வகுப்பில் 181 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.நேற்று வெளிவந்த தேர்வு முடிவுகளில் 181 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மதிப்பெண் விபரம்:

முதல் மதிப்பெண்

கா.பாலநிதி -492,


இரண்டாம் இடம் 

ம.ராஜஶ்ரீ -490,


மூன்றாம் இடம் 

உ.நீலகண்டன் - 489.


பாடம் வாரியாக முதல் மதிப்பெண்

தமிழ் 99

ஆங்கிலம் 99

கணிதம் 100

அறிவியல் 100

சமூக அறிவியல் 100.


100/100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கணிதம் -8 மாணவர்கள், அறிவியல் -01 மாணவர், சமூக அறிவியல் -01 மாணவர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை  தலைமையாசிரியர்(பொறுப்பு) சு.குமரேசன் , ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி  மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கவிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.  மாணவர்களின் வெற்றிக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வழிகாட்டிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளை பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், கிராம பிரமுகர்கள் பாராட்டினர்.400 மதிப்பெண்களுக்கு மேல் 59 மாணவர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad