வலங்கைமானில் தஞ்சைத்தமிழ் மன்றத்தின் ஐந்தாம் ஆண்டுவிழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 12 May 2024

வலங்கைமானில் தஞ்சைத்தமிழ் மன்றத்தின் ஐந்தாம் ஆண்டுவிழா

 


வலங்கைமானில் தஞ்சைத்தமிழ் மன்றத்தின் ஐந்தாம் ஆண்டுவிழா


தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சைத்தமிழ் மன்றத்தின் ஐந்தாம் ஆண்டுவிழா வலங்கைமானில் நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி ஆ.வீ.செ.குருமூர்த்தி குழுவினரின் வயலின் இசைநிகழ்ச்சியுடனும்  குடவாசல் தன்யா பரதநாட்டியத்துடனும் துவங்கியது . காலை நிகழ்ச்சிக்கு பொற்கைபாண்டியனும் ,பிற்பகல் நிகழ்ச்சிக்கு அன்புவல்லி தங்கவேலரும்,ஆகியோர் தலைமை தாங்கினார்.


கோவை இசைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் ,வலங்கைமான் ஜெயஇளங்கோ ,ஆகியோர் முன்னிலை வகித்தார். 


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மணற்பாறை தொன்மைமிகு தமிழ்ச்சங்கத் தலைவர் அரிமா சௌமா இராசரத்தினம், திரைப்படப் பாடலாசிரியர் கவிக்கோ விக்டர்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து மதுரை மருத்துவர் செகவான், சுப முருகானந்தம், சென்னை ஞாலஇரவிச்சந்திரன், தம்பியின் தம்பி, கோ தெய்வசிகாமணி, சேலம் சக்தி அருளானந்தம் ஆகியோருக்கு கவிஞர் கம்பதாசன்விருது வழங்கப்பட்டது


மன்னை வாசுதேவன் வடுவூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு சண்முகசுந்தரனார் விருதும், குடந்தை ஏஎஸ்மூர்த்தி பட்டுக்கோட்டை அன்புவல்லி தங்கவேலர் திருநாகேஸ்வரம் குஞ்சித சுகுமார் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.  


தஞ்சைத்தமிழ்மன்ற நிறுவுநர் செயலர் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் , சரசுவதி பாசுகரன், ஈழவேங்கை தம்பியின்தம்பி ஆகியோர் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. விழாவில் 9 நூல்கள் வெளியிடப்பட்டன. இளம் தவில்கலைஞர்களின்  தவிலிசைக்குப் பிறகு பொருளாளர் தேவநாதன் ஆண்டறிக்கை வாசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கவிஞர்கள்  ஆசிரியர்களுக்கு ஆகியோருக்கு  விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் சித்தார்த் பாண்டியன், பேச்சியம்மாள், இராஜேஷ், மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சைத்தமிழ்மன்றத் தலைவர் இராணி லட்சுமி வரவேற்றார். நிறைவில் துணைத்தலைவர் சண்முகம் நன்றி கூறினார். அனைத்து ஏற்பாடுகளையும்  முத்துவிஜயன் தொகுத்து வழங்கினார்

No comments:

Post a Comment

Post Top Ad