தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 April 2024

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கம்.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக சித்த மருத்துவ துறை  சார்பில் தமிழக அரசு நிதி நல்கையின் கீழ் "உடலினை உறுதி செய்" எனும் தலைப்பில் ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமையேற்று  தனது உரையில் உடல் நலமும் மனநலமும் அன்றாட வாழ்விற்கு எவ்வளவு முக்கியம் என்பதை தனது அனுபவத்திலிருந்து உளவியலாளர் சிக்மன்ட் ஃபிராய்ட் கோட்பாடுகளுடன் விளக்கினார். 


தொடர்ந்து பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் முனை சி. அமுதா தமிழ் இலக்கியங்கள் பேசும் உடல் நலன் குறித்து எடுத்துரைத்தார். பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் அறிவியல் புலம் முதன்மையருமானபேராசிரியர் ரெ.நீலகண்டன்  இன்றைய தலைமுறையினரின் அவசர சூழல் மற்றும் மன அழுத்தம் உறுதியான உடலை பெறுவதை எவ்விதம் தடுக்கிறது என்பதையும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். உடல்நலம் பேணுவதில் சித்த மருத்துவ வாழ்வியல்; விளையாட்டின் முக்கியத்துவம்; உணவு மற்றும் யோகாவின் பங்கு உள்ளிட்ட மூன்று அமர்வுகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

கருத்தரங்கத்தின் ஆக்கமும் நோக்கமும் குறித்து கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் சித்த மருத்துவ உதவி பேராசிரியர் மரு து. மாண்டெலா பேசினார்.  முன்னதாக சித்த மருத்துவத் துறைத் தலைவர் மரு முனை பெ. பாரதஜோதி வரவேற்றார் நிறைவில் பேராளர்களை அறிமுகம் செய்து சித்த மருத்துவத்துறை உதவி பேராசிரியர் மரு முனை பழ. பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad