தஞ்சாவூரில் 'சூடு பிடிக்கும் தேர்தல் களம் 'எம்பி தொகுதிக்கு திமுக சார்பில் விருப்பமனு பெற்ற மன்னார்குடி முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்களின் பேத்தி. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 4 March 2024

தஞ்சாவூரில் 'சூடு பிடிக்கும் தேர்தல் களம் 'எம்பி தொகுதிக்கு திமுக சார்பில் விருப்பமனு பெற்ற மன்னார்குடி முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்களின் பேத்தி.


தஞ்சாவூர் எம்பி தொகுதிக்கு திமுக சார்பில் பலர் விருப்பமனு பெற்றுள்ளனர். அவர்களில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்களின் பேத்தி கட்டட பொறியாளர்  சூரியபிரகாஷ் அவர்களின் மனைவியுமான மீனாட்சி திமுகவில் மன்னார்குடி நகர மன்ற உறுப்பினராகவும் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் நிர்வாகியாகவும் உள்ளிட்ட திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.

தஞ்சை தொகுதியில், திமுக சார்பில் பெண் வேட்பாளர்கள் இதுவரை நிறுத்தப்பட்டதில்லை. கல்வித்தகுதி, MA, D.Arch கட்டிட வடிவமைப்பாளர் ரோட்டரி சங்கத் தலைவர்,  வருங்கால உதவி ஆளுநர் பொருளாதார வசதி, சமூக சேவை உள்ளிட்ட அனைத்து தகுதிகளையும் அடிப்படையாக வைத்து பார்த்தால், மீனாட்சி சூரிய பிரகாஷ் அவர்களுக்கு  தஞ்சை பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு ஆதரவும் இருக்கிறது. 


என்கிறது திமுக வட்டாரம் மீனாட்சிக்கு  சீட் கொடுக்கப் பட்டால், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார் குடி, திருவையாறு, ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள முக்குலத்தோரின் ஓட்டுகளை சுலபமாக கைப்பற்றலாம் அதேபோல கட்சி தலைமையும் கணக்கு போடுகிறதாம். இவருக்குப் போட்டியாக தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் மாவட்ட ஊராட்சித் தலைவராக இருக்கும் தலைமங்கலம் கோ.  பாலசுப்பிரமணியன் ஆகியோரும் சீட் கேட்டு காய் நகர்த்தி வருகிறார்கள் .


யாருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தஞ்சையில் எகிறியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்களின் பேத்தி 25 ஆண்டுகள் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தவர் என்பதால் மீனாட்சி சூரியபிரகாஷ்க்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.


- செய்தியாளர் ஆர். தமிழரசன் 

No comments:

Post a Comment

Post Top Ad