மல்லிப்பட்டிணத்தில் நம் பள்ளி, நம் பெருமை விழிப்புணர்வு பேரணி..! - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 6 March 2024

மல்லிப்பட்டிணத்தில் நம் பள்ளி, நம் பெருமை விழிப்புணர்வு பேரணி..!


தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நம் பள்ளி, நம் பெருமை என்ற முழக்கத்துடன் அடங்கிய பதாகைகளை ஏந்தியும்,கோசங்களை எழுப்பியும்  அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைகளை அதிகப்படுத்தும் வண்ணம் மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விழிப்புணர்வு பேரணி மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

பேரணியில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மை குழுவினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


- பேராவூரணி நீலகண்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad