இந்த அறிவிப்பின் படி தமிழ்ஒளி அவர்களின் மார்பளவு சிலை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டது. தமிழக முதல்வர் அவர்களால் 27.02.2024 அன்று தலைமைச் செயலகத்திலுள்ள பத்திரிகையாளர் அறையிலிருந்து கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் மார்பளவு சிலைக்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். அதன்பின்னர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் அவர்கள் கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி ஐசபீர்பானு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.இரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர், தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment