பேராவூரணி அருகே தேசிய வருவாய்வழி படிப்பு உதவித்தொகை பெறும் தேர்வில் 2ம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 2 March 2024

பேராவூரணி அருகே தேசிய வருவாய்வழி படிப்பு உதவித்தொகை பெறும் தேர்வில் 2ம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா.

.com/img/a/

photo_2024-03-02_14-51-33

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருடம் தோறும் 8-ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு தேசிய வருவாய்வழி படிப்பு உதவித்தொகை தேர்வு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது.இந்தத் தேர்வில் ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவி ஆர்.யாழினி 117 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 262 வது இடத்திலும், தஞ்சை மாவட்டத்தில் 15 வது இடத்திலும், பேராவூரணி ஒன்றியத்தில் 2 வது இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
 

அவருக்கு பாராட்டு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதகலாரத்னா, முனைவர், வேத .குஞ்சருளன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஜெயபாலன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் அ.அன்பானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேராவூரணி ஒன்றியத்தில் 117 மதிப்பெண் எடுத்து 2வது இடத்தை பிடித்த மாணவி ஆர். யாழினிக்கு பொன்னாடை அணிவித்து, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.


மேலும் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பயனுள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஜெஸிலிட்டில்ரோஸ், தேர்விற்கு மாணவர்களை தயார் செய்த அறிவியல் பட்டதாரி ஆசிரியை செபஸ்டியன் சகாயமாலா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ - மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


- பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad