இதில் 50 வருடங்களுக்கு மேலாக கோவில், மடம் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு உடனடியாக அரசு பட்டா வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நீதியை தமிழக அரசு வேறு திட்டங்களுக்கு உபயோகப்படுத்தக் கூடாது. மத்திய அரசுக்கு எதிராக போராடிவரும் யோசனை கோரிக்கையான விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்சம் ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 300, ஊதியம் வழங்க வேண்டும். தாட்கோ திட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் வழங்கப்படும் தொகையை வேறு நபர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் ஒரு லட்சம் பிரித்து வழங்குவதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்காமல் அவர்களை அரசு நிரந்தர ஊழியராக நியமிக்க வேண்டும்.
காவிரி நீர் தொடர்பான விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள போராட்ட வழக்குகளை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இவிஎம் வாக்கு மிஷினை நீக்கி பழைய வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சமூக எழுச்சி பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment