தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ழ பவுண்டேஷன் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், ஓய்வு பெற்ற கலெக்டர் அன்புச்செல்வன் ஆகியோர் இலவச பயிற்சி மையத்தை திறந்து வைத்தனர். பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணுபிரியா சிறப்புரையாற்றினர். விக்னேஷ் நோக்கவுரையாற்றினார்.
இதில், வெங்கடேஷ்வரா கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் ஜீவகன்அய்யநாதன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல்மஜீத், மாவட்ட அவைத்தலைவர் சுபசேகர், மாவட்ட கவுன்சிலர்கள் இலக்கியாநெப்போலியன், மூர்த்தி, மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ழ பவுண்டேஷன் நிறுவனர் கார்க்கி நன்றி கூறினார்.
- பேராவூரணி நீலகண்டன்.
No comments:
Post a Comment