கும்பகோணம் அருகே திருப்புறம்பியும் ஊராட்சியில் மாணிக்கம் மகன் மாற்றுத்திறனாளியான பழனிவேல், நீர் வளத்துறைக்கு சொந்தமான மண்ணியாரு கரையோரம் இடத்தில் சிறியதாக குடிசை போட்டு ஆக்கிரமித்துள்ளார். இந்நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றி சென்ற போது பழனிவேல் வாழ்வாதாரமின்றி நானும் மனைவியும் மற்றும் மகனும் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வந்தவுடன் காலி செய்கிறேன் என்றும் குறைந்தபட்சமாக ஆறு மாதம் அவகாசம் கொடுக்குமாறு பழனிவேல், அதிகாரியிடம் தெரிவித்தார்.
இதற்கு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பூங்கொடி, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்ததின் பேரில் அப்பகுதி சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு த சின்னையன், மற்றும் ஊர்மக்கள் முன்னிலையில் பழனிவேல் ஆறு மாதத்தில் இடத்தை காலி செய்கிறேன் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். இதில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் சிவ செந்தில்குமார், மற்றும் வருவாய் துறையினர் பொதுப்பணி துறை ஆற்றுப்பகுதி நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment