தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வல்லவன் பட்டினம் அருகே ராமேஸ்வரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிரே கட்டுமாவடி நோக்கி சென்று கொண்டிருந்த பால் வேனும் நேருக்கு நேர் வல்லவன்பட்டினத்தில் மோதிக்கொண்டதில் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் உள்ள வாரியில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
அருகில் உள்ள கிராம மக்கள் பஸ் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பஸ்சில் பயணம் செய்த 32 பேர் காயமடைந்தனர். 6 பேர் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும், 4 பேர் அறந்தாங்கி ஆஸ்பத்திரிக்கும், அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment