திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் கோவில் கும்பாபிஷேக திருப்பணி துவக்க விழா நடந்தது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 21 February 2024

திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் கோவில் கும்பாபிஷேக திருப்பணி துவக்க விழா நடந்தது.


திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம்  ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் கோவில் கும்பாபிஷேக திருப்பணி துவக்க விழா நடந்தது.

திருவையாறு ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை  கும்பாபிஷேகம் நடத்துவ வழக்கம் இதை யொட்டி ஐயாறப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி துவக்க விழா தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. இரண்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து புனித நீர் கடம் புறப்பட்டு ஐயாறப்பர் கோவில் வலம் வந்து கோபுரங்கள், விமான கோபுர திருவுருவ படங்களுக்கு சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க  புனித நீர் ஊற்றி தீபாராதனைகள் நடந்தது. 


பின்னர் தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கன்னி மூலையில் அடிக்கல் எடுத்து வைத்து  கோவில் கும்பாபிஷேக  திருப்பணியை தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாணைப்படி கட்டளை விசாரணை சொக்கலிங்கத் தம்பிரான் மற்றும் நிர்வாகிகள் , பணியாளர்கள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad