இதில் மண்டல துணை வட்டாட்சியர் அம்மு, சரக வருவாய் ஆய்வர் சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர்கள் விளாங்குடி ரேணுகா, இராயம்பேட்டை துளசிராமன், கல்யாணபுரம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன் புனவாசல் புகழேந்தி, ஊராட்சி மன்றத்தலைவர், புனவாசல் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ராம், விசிக தொகுதிச்செயலாளர் கதிரவன், அதிமுக கிளை செயலாளர் திருஞானசேகர், சிபி எம் செந்தாமரைச்செல்வி, பிரதீப்ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவையாறு வட்டத்திலுள்ள விளாங்குடி, காருகுடி, இராயம்பேட்டை, திருப்பழனம், சிறுபுலியூர், கடுவெளி, ஆக்கிநாதபுரம், பொன்னாவரை, கல்யாணபுரம், தில்லைஸ்தானம், புனவாசல் மற்றும் மேலபுனவாசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களை திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 2024 பாராளுமன்றத்தேர்தலை புறக்கணிப்பதாக மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
கிராம மக்கள், தொடர்புடைய பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ஆகியோருடன் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. மேற்படி கிராமங்களில் விவசாய தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் உள்ளனர். எனவே அரசு வழங்கும் நூறு நாள் வேலை வழங்கும் திட்டம் மூலம் கிடைக்கும் வேலை கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என்றும் கிராமத்தின் தனி சுயாட்சி பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். எனவே திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் மறுக்கும் பட்சத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக திருவையாறு பேரூராட்சி அலுவலகம் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலரிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில், மேற்படி கிராமங்களை திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து திருவையாறு நகராட்சியாக தரம் உயர்த்தும் ஆணை ஏதும் வரபெறவில்லை என்று தெரிவித்தார். எனவே மேற்படி கிராமங்களை திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து திருவையாறு நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக எந்தவொரு அரசு வழிமுறைகளும் ஆணைகளும் வரப்பெறாத நிலையில் இது வதந்தி என்று தெரிவிக்கபட்டதை தொடர்ந்து எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவதாக கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment