தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டக் கிளையில் இன்று உள்ளிருப்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இப் போராட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் திரு செந்தில்குமார் தலைமை வகித்து எழுச்சி உரை ஆற்றினார் முன்னிலை திருமதி சித்ரா இணை செயலாளர் மற்றும் வட்டக்கிளை பொறுப்பாளர்கள் அலெக்ஸ் பாண்டியன், சசிகுமார், ஜெயேந்திரன், நாகநாதன், குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோழமை சங்க நிர்வாகி ஜோதிநாயகம் சிறப்புரை ஆற்றினார் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தியாகராஜன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் 50க்கும் மேற்பட்ட வட்ட சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment