கும்பகோணம் புதிய ஆயராக ஜீவானந்தம் அமலநாதன் பொறுப்பேற்பு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 12 February 2024

கும்பகோணம் புதிய ஆயராக ஜீவானந்தம் அமலநாதன் பொறுப்பேற்பு.

.com/img/a/

photo_2024-02-12_14-06-05

புதுச்சேரியிலிருந்து 1899ம் ஆண்டு பிரிந்து கும்பகோணம் மறை மாவட்டம் உருவானது. இதன் முதல் ஆயராக பொத்தேரோ அடிகளாா் பொறுப்பேற்று 1913ம் ஆண்டு வரை இருந்தாா். இவரைத்தொடா்ந்து, மரிய அகுஸ்தின் சப்புயி அடிகளாா் (1913 - 1930), பீட்டா் பிரான்சிஸ் அடிகளாா், பவுல் அருள்சாமி, பீட்டா் ரெமிஜியுஸ், அந்தோணிசாமி அடிகளாா் ஆகியோா் ஆயா்களாக இருந்தனா்.
 

இந்நிலையில், அந்தோணிசாமி அடிகளாா் ஓய்வு பெற்றதையொட்டி, கும்பகோணம் மறை மாவட்டத்தின் ஏழாவது ஆயராக ஜீவானந்தம் அமலநாதன் அடிகளாா் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொறுப்பேற்றாா். இதற்கான விழா கும்பகோணம் அலங்கார அன்னை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு புதுச்சேரி மற்றும் கடலூா் உயா் மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் அடிகளாா் தலைமை வகித்தாா்.


முன்னதாக, ஆயா் இல்லத்திலிருந்து பங்கு தந்தையா்கள், அருட்தந்தையா்கள், உதவி அருட்தந்தையா்கள், தேவாலய அதிபா்கள் ஆகியோா் புதிய ஆயா் ஜீவானந்தம் அமலநாதன் அடிகளாரை இசை நிகழ்ச்சியுடன் பவனியாக விழா மேடைக்கு அழைத்து வந்தனா். விழாவின்போது 15 போ் கொண்ட பெண்கள் ஆரத்தி எடுத்து ஆயரை விழா மேடைக்கு அழைத்தனா். பின்னா், புதுச்சேரி மற்றும் கடலூா் உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் அடிகளாா் உள்ளிட்டோா் ஜீவானந்தம் அமலநாதன் அடிகளாரை புதிய ஆயராக திருநிலைப்படுத்தினா். 


கும்பகோணம் மறை மாவட்டம் என்பது கும்பகோணம், மைக்கேல்பட்டி (தஞ்சாவூா் மாவட்டம்), ஜெயங்கொண்டம் (அரியலூா் மாவட்டம்), பெரம்பலூா், லால்குடி, புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) ஆகிய 6 சிவில் மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்நிகழ்சசியில் அந்தோணிசாமி பிரான்சிஸ் அடிகளாா், கோட்டாறு மறை மாவட்ட இணை ஆயா் நரேசன் சூசை அடிகளாா், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயா் நீதிநாதன் அடிகளாா் உள்பட ஆயா்கள், அருள்பணியாளா்கள், இருபால் துறவியா்கள் மற்றும் பொதுநிலையினா் கலந்து கொண்டனா். 

No comments:

Post a Comment

Post Top Ad