கும்பகோணம் காசிராமன் தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீவேதவிநாயகர், ஸ்ரீமஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர், ஸ்ரீவேத ஆஞ்சநேயர் சன்னதிகள் கொண்ட ஸ்ரீவேத விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் சம்வத்ஸர பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு 05ம் ஆண்டு சம்வத்ஸர பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை டபீர் காவிரி படித்துறையில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து ஜண்ட மேளம் முழங்க, மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தனர்.
தொடர்ந்து வேத விநாயகருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்வித்து, தீபாராதணை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு வானவேடிக்கையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வேத விநாயகர் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தெருவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment