தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பிரசித்திப்பெற்று விளங்கி வரும் பிள்ளையார் கோவில் உள்ளது இக்கோவிலில் இந்தப் பகுதியில் உள்ள சுற்று வட்டார பொதுமக்கள் தங்கள் இல்ல விழாக்களான திருமண விழா . காதணி விழா இவைகளை இக்கோவிலில் வைத்து நடத்துவது வழக்கம். இந்நிலையில் இன்று தை மாதத்தில் கடைசி முகூர்த்தம் என்பதால் காலை முதலே கோவிலில் திருமணங்கள் நடக்க தொடங்கின.
இந்நிலையில் நேரம் ஆக ஆக திருமணங்களின் உறவினர்கள் நண்பர்கள் என மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கின இதனால் கோவில் மற்றும் கோவில் வெளிப்புறப் பகுதி என மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பேராவூரணி கடைவீதி பகுதிகளிலும் மக்கள் போக்குவரத்து அதிகமானது சாலை இருபுறமும் வாகணங்கள் நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் அவதிபட்டனர். இந்த போக்குவரத்து பாதிப்பு சுமார் மூன்று மணி நேரம் பாதிக்கப்பட்டது
- பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்
No comments:
Post a Comment