தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக திரு .ஜூலியஸ், தேர்தல் துணை ஆணையராக திரு. தர்மராஜன் ஆகியோர் பணியாற்றினர்.அனைத்து பொறுப்புகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாவட்டத் தலைவராக திரு.க.அருள் அவர்களும், மாவட்டச் செயலாளராக திரு செ.ராகவன்துரை அவர்களும், மாவட்டப் பொருளாளராக திரு.ந.நாகராஜன்அவர்களும், மாவட்டத் துணை தலைவர்களாக திரு.மா.நாகராஜன், திரு.பா.ராஜேந்திரன், திருமதி சீ.சூரியபிரபா, துணைச் செயலாளர்களாக திரு.செ.அன்பரசன், திரு.கு.சௌந்தரராஜன், திருமதி.சு.விஜயலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக திரு.ஆ.பாஸ்கர், திருமதி.கு.சகிலா மற்றும் மகளிர் செயற்குழுவில் ஐந்து நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- பேராவூரணி நீலகண்டன்.
No comments:
Post a Comment