கும்பகோணத்தில் மொசைக் கலையில் ரூபிக் கன சதுரங்களை பயன்படுத்தி கடவுள் விநாயக பெருமானின் உருவப் படத்தை உருவாக்கி மாணவ மாணவிகள் உலக சாதனை. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 6 February 2024

கும்பகோணத்தில் மொசைக் கலையில் ரூபிக் கன சதுரங்களை பயன்படுத்தி கடவுள் விநாயக பெருமானின் உருவப் படத்தை உருவாக்கி மாணவ மாணவிகள் உலக சாதனை.

.com/img/a/

photo_2024-02-06_21-52-32

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பாணாதுறை சன்னதி தெருவில் இயங்கி வரும் கல்ப விர்க்ஷா கல்வி நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு விழா தாளாளர் சுவாமிநாதன் தலைமையிலும், முதல்வர் சிவரஞ்சனி சுவாமிநாதன் முன்னிலையிலும் நடைபெற்றது. 


விழாவில் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற உலக சாதனை முயற்சியில் இதன் நிறுவனர் ஜேக்கப் ஞானச்செல்வன், பொதுமேலாளர் சீனிவாசன், தலைவர் பிரியா சுரேஷ்குமார் மற்றும் தீர்ப்பாளர் அஹமத் தம்பி ஆகியோர் முன்னிலையில் கல்ப விர்க்ஷா கல்வி நிறுவனத்தில் ரூபிக் கனசதுர வகுப்பில் பயின்று வருகின்ற கமலேஷ், கைலாஷ், சிவபாலன், விசாலினி, தீபமாலிகா, தீக்ஷா மற்றும் அழகம்மை ஆகியோர் அடங்கிய ஏழு மாணவ, மாணவிகள் கொண்ட குழுவானது கடவுள் விநாயக பெருமானின் உருவப்படத்தை மொசைக் கலையில் ரூபிக்கன சதுரங்களை பயன்படுத்தி 01 மணி நேரம், 13 நிமிடங்கள், 37 வினாடிகளில் மனக்கணித கணக்கீடுகளின் தீர்வுகளை கூறிக்கொண்டு உருவப்படத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது.


மேலும் இந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவிகளின் அபாகஸ் (நுண் கணிதம்), வேத கணிதம், கர்நாடக சங்கீதம், ரூபிக் கனசதுரம், நடு மூளை செயல் திறன் மேம்பாடு (Mid Brain Activation) ஆகிய பயிற்சி வகுப்புகளின் கீழ் தங்களது திறமைகளை தனித்தனியாக வெளிப்படுத்தினர். தொடர்ந்து இப்பள்ளி குழந்தைகளின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad