கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் வட்டார அளவிலான தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 7 February 2024

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் வட்டார அளவிலான தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.

.com/img/a/

photo_2024-02-07_21-46-32

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் வீடுவீடாக சென்று நேரடி கள ஆய்வின் மூலம் தொழுநோய் கண்டறியும் பணி நேற்று 07ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் நேரடி கள ஆய்வு தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமிற்கு வட்டார அளவிலான பயிற்சி முகாம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த முகாமிற்கு தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் குணசீலன் தலைமை தாங்கினார். திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்தார்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு கலந்து கொண்டு வீடுவீடாக சென்று தொழுநோய் கண்டறியும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு குறிப்புகள் அடங்கிய படிவம் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். 


தொடர்ந்து நடைபெற்ற முகாமில் திருவிடைமருதூர் வட்டாரத்தில் உள்ள திருநாகேஸ்வரம், முருக்கங்குடி, வேப்பத்தூர், நரசிங்கம்பேட்டை மற்றும் திருநீலக்குடி ஆகிய கிராமங்களில் வீடுவீடாக சென்று தொழுநோய் கண்டறியும் பணியில் ஈடுபடும்போது தொழுநோய் குறித்து கவனிக்க வேண்டிய அறிகுறிகள் குறித்தும், அவர்களை அணுக வேண்டிய முறைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்குவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த முகாமிற்கு இடையே ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட திமுக பிரதிநிதி கிருஷ்ணராஜ், மக்களை தேடி மருத்துவ குழுவினர், மக்கள் நல பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad