கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்து உரையாற்றினார், முன்னாள் அமைச்சர் அமைப்புச்செயலாளர் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆர் காமராஜ் வரவேற்று பேசினார் முன்னாள் அமைச்சர் அமைப்புச் செயலாளர் டி ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் செம்மலை, மகளிர் அணி செயலாளர் பா வளர்மதி, அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன் டாக்டர் புரட்சித்தலைவி பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், இலக்கிய அணி செயலாளர், செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பொதுமக்கள் விவசாயிகள் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பிரதிநிதிகள் பெருந்திரளாக பங்கேற்றார்கள் இக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர் காந்தி விவசாய அணி மாநில இணைச்செயலாளர் கு ராஜமாணிக்கம் தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ரத்தினசாமி, மத்திய மாவட்ட செயலாளர் மா சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் சிவி சேகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதி மோகன், கும்பகோணம் மாநகர செயலாளர் இரா இராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். விரைவாக தஞ்சாவூர் மாநகர செயலாளர் என் எஸ் சரவணன் நன்றி உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் பங்கேற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் பேசிய விவரங்களை மனுக்களாகவும் வழங்கினார் கருத்து கேட்பு கூட்டத்தின் தலைவர் நத்தம் விஸ்வநாதன் அவர்களுக்கு விவசாயிகள் எனும் இயற்கை விவசாயம் பற்றிய புத்தகத்தை வழங்கினார் கூட்டத்தில் ஏ கே ஆர் ரவிச்சந்தர் பேசியதாவது:
திமுக தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டலுக்கு ரூபாய் 2500 - ம் கரும்பு டன் ஒன்றுக்கு 4000-ம் ஆட்சி பொறுப்பேற்றால் வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்த விவசாயிகளை ஏமாற்றியுள்ளதை நாடு அறியும். எனவே அதிமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றும் நெல் குவின்டாலுக்கு 3000-ம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4500 - ம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வெளியிட விரும்புகிறேன்
தமிழ்நாடு அரசு நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தின் நடைபெறும் லஞ்சம் எடை போடும் விவசாயிகளை அவமதித்தல் அச்சுறுத்தல் மிரட்டுதல் போன்ற முறைகேடுகள் இருந்து எடப்பாடி தலைமையிலான அம்மாவின் அரசு பாதுகாக்கும் என அறிவிக்க வேண்டுகிறேன். தஞ்சாவூரில் அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள் நெல்லை விற்பவர் விவசாயி நெல்லை அரிசியாக மாற்றி விற்றால் வியாபாரி, உளுந்தை விற்றால் விவசாயி உளுந்து உடைத்து விற்ற வியாபாரி, தேங்காய் விற்றால் விவசாயி, தேங்காய் எண்ணெய் விற்றால் வியாபாரி எனவே விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்க தொழிற்சாலைகளை ஒன்றிய அரசு தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.
தஞ்சாவூரில் ஒரே ஒரு சர்க்கரை ஆலை மட்டுமே உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒதுக்கப்பட்ட செங்கிப்பட்டி பகுதியில் மிகப்பெரிய தொழிற்சாலை அமைத்து டெல்டா மாவட்டங்களில் பட்டம் படித்து விட்டு 100 நாள் வேலை செய்யும் இருபால் இளைஞர்களுக்கும் வேலைக்கான உத்திரவாதம் வழங்க வேண்டுகிறேன் விவசாயிகளுக்கு மேற்படி தொழிற்சாலைகளுக்கு தேவையான மூல பொருள்களை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் என பேசினர்.
No comments:
Post a Comment