தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் வேளாண்துறை நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி கோமதி தங்கம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) திரு ஈஸ்வர் வேளாண் துணை இயக்குனர் பாலயோகினி கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் வேளாண் துறை அலுவலர்கள் பங்கேற்று திருமதி கோமதி தங்கம் அவர்களுக்கு சால்வைகள் சந்தன மாலைகள் மலர் மாலைகள் பரிசு பொருட்கள் புத்தகங்கள் ஆகியவை வழங்கி பாராட்டுகளை தெரிவித்து பிரியாவிடை தந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கணபதி அக்ரஹாரம் சீனிவாசன் அய்யம்பேட்டை முகமது இப்ராஹிம் என் வி கண்ணன் அம்மாபேட்டை செந்தில்குமார் வி எஸ் வீரப்பன் எல் பழனியப்பன் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் மற்றும் பல விவசாயிகள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் திருமதி கோமதி தங்கம் அவர்களை மனதார வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment