காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் பேசியதாவது: காவிரி உரிமை மீட்க உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கை தி.மு.க அரசு திரும்ப பெற்று தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தது. அதை தொடர்ந்து விவசாயிகள் சார்பில் காவிரிடெல்டா விவசாயிகள் சங்க செயலாளார் மன்னார்குடி ரெங்கநாதன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டதால்தான் 2007 நடுவர் மன்ற தீர்ப்பு 2014ல் முதல்வராக பொறுப்பேற்ற புரட்சி தலைவி அம்மா சட்ட போராட்டம் நடத்தி 2013ல் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டார்கள்.
அதை தொடர்ந்து 2020 ஆண்டு முதல் மேகதாதுவில் அணைக் கட்டுவோம் சூளுரைத்து அதற்கான நிதி ஒதுக்கி கர்நாடகம் செயல்படுவது வன்மையாக கண்டிக்க தக்கது. அரை நூற்றாண்டு காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் அடுத்த சந்ததியின் வாழ்வாதாரம் காக்க நாங்கள் உயிரை இழக்கவும் தயார் நிலையில் உள்ளோம். மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தப் பதிவை அரசுக்கும், முதல்வருக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செந்நெல் பூமியாய் செழித்த சோழநாடு, நெற்களஞ்சியம் தற்பொழுது வானம் பாத்த பூமியாய் மாறிப் போனது மேட்டூர் அணை மூடிய நிலையில் திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தியில் பருவ மழையினால் நூறு ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்திருந்தார்கள். கதிர்வரும் நிலையில் வயல் காய்ந்து நெற்பயிர் கருகி வருகிறது. காவிரியில் இருந்து பிரியும் குடமுறுட்டி பாசன விவசாயிகள் தண்ணீர் கேட்டும் தண்ணீர் வழங்காததால் நூறு ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் கருகிவிட்டது. இனி நெற்பயிர்களை காப்பற்ற இயலாது எனவே மேற்படி விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், காப்பீடு இழப்பீடும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திருவையாறு மற்றும் காருகுடி கிராமத்தில் நீரின்றி புதிய நோய் தாக்குதலால் 70 ஏக்கர் வரை கதிர் வந்த நிலையில் காய்ந்து ஒரு மாவிற்கு 4 முட்டை மட்டுமே மகசூல் வரும் நிலையில் உள்ளது எனவே இந்த விவசாயிகளின் . இழப்பீட்டுக்கு காப்பீடு இழப்பீடு வழங்க வலியுறுத்துகிறேன் எனக் கூறினார்.
No comments:
Post a Comment