தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பொன்னாங்கண்ணிக் காடு கிராமத்தை சேர்ந்த பூபதி என்பவர் மின்சார சம்பந்தப்பட்ட வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை செய்துக்கொண்டிருக்கும் போது நிகழ்ந்த விபத்தில் வலது கை பாதிப்படைந்துள்ளது.
இதனால் அவரால் வேலை செய்ய முடியாத நிலையில் தவித்து வந்துள்ளார்.தனது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.இந்நிலையில் தனக்கு உதவிடுமாறு துளிர் அறக்கட்டளையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையறிந்த துளிர் அறக்கட்டளை சார்பில் பூபதிக்கு கணிணி மையம் அமைக்க தேவையான பிரிண்டர் இயந்திரம் .தம்ப் பிரிண்டர் இயந்திரம் என இதர பொருட்கள் ரூ 35 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அறக்கட்டளை தலைவர் ஆர்.நாகேந்திரகுமார். செயலாளர் சண்முகநாதன். பொரு லாளர் வன்மீகநாதன். இவர்களுடன் சமூக ஆர்வலர் சதீஷ்குமார் கலந்துக் கொண்டு பூபதிக்கு வழங்கினார்கள்.
- பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்.
No comments:
Post a Comment