திருப்பனந்தாளில் ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 16 February 2024

திருப்பனந்தாளில் ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்.

 


இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருப்பனந்தாள் ஒன்றிய அளவில் "ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்" திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபரர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 



இம்முகாமில் திருப்பனந்தாள் ஒன்றியத்தின் 25 பள்ளிகளிலிருந்து ஜே.ஆர்.சி கவுன்சிலர்களுடன் ஜே.ஆர்.சி மாணவ- மாணவிகள் சுமார் 300பேர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் திலகம் தலைமையேற்று, கொடியேற்றிவைத்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். 



ஜே.ஆர்.சி கவுன்சிலர் சண்முகம் வரவேற்றார். ஜே.ஆர்.சி வரலாறு, ஜே.ஆர்.சியின் ஏழு கொள்கைகள், பாடல் மற்றும் உறுதிமொழி சார்ந்த பயிற்சிகளை ஜே.ஆர்.சி கவுன்சிலர் குமணன் வழங்கினார். மேலும் ஜே.ஆர்.சி சார்ந்த ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் வினாடி-வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. 


நிறைவு விழாவில் மாவட்ட ஜே.ஆர்.சி கன்வீனர் ஜான்ஸ்டீபன், கும்பகோணம் ரெட்கிராஸ் துணை சேர்மன் ஆண்ட்ரூரொசாரியோ, பந்தநல்லூர் பிரிவு வனவர் பானுப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, போட்டிகளில் வென்றவர்களுக்கு நினைவுப்பரிசுகளையும், பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களையும் வழங்கினர். 


ஜே.ஆர்.சி கவுன்சிலர் இராஜா நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை அனைத்து பள்ளி ஜே.ஆர்.சி கவுன்சிலர்களும் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad