டெல்லியில் போராடச் செல்லும் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்தும், விவசாயிகள் பிரச்சனையை ஒன்றிய மோடி அரசு தீர்க்க முன்வராததைக் கண்டித்தும், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர் டி.ரவி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலக் குழு உறுப்பினர் பா.பாலசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் துரை.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பி.ஏ.கருப்பையா, ஒன்றிய துணைச் செயலாளர் சி. வீரமணி, ராஜமாணிக்கம், சித்திரவேலு, கருப்பையா, சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பேராவூரணி நீலகண்டன்.
No comments:
Post a Comment