தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் வளாகத்தில் திருவள்ளுவர் கல்விக் கழகம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் இனைந்து நடத்திய டிஎன்பிஎஸ்சி குருப்-4 போட்டிக்கான பயிற்சி வகுப்புகள் திறந்த வெளியில் நடைப்பெற்றன. திருவள்ளூவர் கல்விக் கழகம் த.பழனிவேல் தலைமை வகித்தார். வர்த்தகர் கழக பொருப்பாளர்கள் ராசேந்திரன். திருப்பதி .சாதிக் அலி ஆகியோர் முன்னிலையில் பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி. பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் சுகுமார் மற்றும் டாக்டர் நீலகண்டன் ஆகியோர் வழிகாட்டு சிறப்புரை வழங்கினார்கள். இந்த பயிற்சி வகுப்பிற்கு 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
- பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment