கும்பகோணதில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 2 February 2024

கும்பகோணதில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்.


கும்பகோணம், தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30ந் தேதி  ஆண்டுதோறும்  தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை அனுசரிக்கும் வகையிலும்  தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட தொழுநோய் பிரிவு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் மற்றும் கும்பகோணம் முத்துப்பிள்ளைமண்டபம் திருஇருதய ஆண்டவர் மருத்துமனை (தொழுநோய் பிரிவு) மற்றும் திரு இருதய ஆண்டவர் செய்விலியர் கல்லூரி இணைந்து நடத்திய தேசிய  தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம், குடந்தை மாநகரம் கார்னேசன் மகப்பேறு மருத்துவனை வளாகத்தில் தொடங்கியது.  

ஊர்வலத்தை குடந்தை வருவாய் கோட்டாச்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் திருமதி.செ .பூர்ணிமா அவர்கள் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த  மாவட்ட தொழுநோய் பிரிவு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்  இயக்குநர் மரு. R .குணசீலன், குடந்தை மாநகர நகர் நல அலுவலர் மரு. A.அடலரசி,  திரு இருதய ஆண்டவர் பொது மருத்துமனை நிர்வாகி அருள்சகோதரி ஆலிஸ் பிரான்சிஸ்,  மரு. A. சுப்பிரமணியன்,  முதல்வர் பேரா. S..வசந்தா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொழுநோய் விழிப்புணர்வு  ஊர்திமொழி ஏற்கப்பட்டது மேலும் மரு. A. சுப்பிரமணியன் அவரகள்  தொழுநோய் பற்றிய சிறப்புரையாற்றினார். முன்னதாக திரு இருதய ஆண்டவர் மருத்துமனை இயக்குனர் அருட்தந்தை T.தேவதாஸ் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் மற்றும்  மருத்துவர்கள் உட்பட அனைவரையும்   வரவேற்றார்.  


இதில் மாவட்ட தொழுநோய் பிரிவு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்  இயக்குனரக அலுவலக ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்  K.R.ஹரிஹரன், M.ஜெயக்குமார், R. சுவாமிநாதன், பிரான்சிஸ் பால் துரைராஜ், தியாகராஜன், முத்துக்குமாரசாமி மற்றும் இருதய ஆண்டவர் செய்விலியர் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மருத்துமனை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் ஊடக செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட தொழுநோய் பிரிவு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்  இயக்குனரக சார்பாக A.முபாரக் அலி  நன்றி தெரிவித்து கொண்டார். 


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தொழுநோய் பிரிவு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரக மேற்பார்வையாளர் R.சுவாமிநாதன்  மற்றும் திரு இருதய ஆண்டவர் பொது மருத்துமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் S.தியாகராஜன் இணைந்து  செய்திருந்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad