தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், சேதுபாவாசத்திரம் சாலையில், பூனைகுத்தியாற்றின் குறுக்கே, ரூ.8 கோடியே 37 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில், பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணி துவக்க விழா நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள் அலகு) உதவிப் பொறியாளர் அன்சாரி ராஜா முன்னிலை வகித்தார்.
இதில், திமுக ஒன்றிய செயலாளர்கள் க.அன்பழகன், இளங்கோ, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பேராவூரணி செய்தியாளார் நீலகண்டன்
No comments:
Post a Comment