கடல்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 27 February 2024

கடல்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு வனத்துறை அமைத்துள்ளது. கடற்பசுவை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட வனத்துறை அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில் பேராவூரணி அருகே உள்ள மனோரா கடற்கரையில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

கலை நிகழ்ச்சிகள் மூலம் கடல் பசுவை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும்  தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் உறுதிமொழியை வாசிக்க கடற்பசுவை பாதுகாப்போம் என மீனவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


- பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad