விஸ்வபாரத அமைப்பு சாரா மற்றும் கட்டுமான பொது தொழிலாளர்கள் சங்க, பொதுக்குழு மற்றும் ஆண்டறிக்கை சமர்ப்பித்தல் கூட்டம் தஞ்சை பெசன்ட்அரங்கில், நேற்றைய தினம் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பாளர் ஏ.ராஜ்மோகன் தலைமை தாங்கினார், மாநில செயலாளர்,கே. பரமசிவம்,மயிலாடுத்துறை பொதுச் செயலாளர், கே.ஆர்.சீனிவாசன், கடலூர் மாவட்ட தலைவர்,ஜி. மகாலிங்கம், திண்டுக்கல் மாவட்ட தலைவர், நந்தினி- கருணாநிதி, சங்க ஆலோசகர் எஸ்.பி. எம். முத்து சிவசங்கர், (பட்டுக்கோட்டை) மாநிலத் துணைச் செயலாளர்,எம். சுப்பிரமணியன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர், மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர்,எஸ். பாலசுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார், தஞ்சை மாவட்ட தலைவர்,எஸ். சீனிவாசன்தொடக்க உரையாற்றினார்.
விஸ்வபாரத தொழிற்சங்க சட்ட ஆலோசகர், வழக்கறிஞர்,க. அஸ்வின் தீர்மானத்தினை வலியுறுத்தினர், விஸ்வ குல விடியல் மாநிலத் தலைவர்,சி. பாண்டித்துரை சிறப்புரையாற்றினார், பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், ராஜி தர்மலிங்கம், ஆறுமுகம், சுந்தர் குமார், என். ஆறுமுகம், ஜி.சுந்தர் குமார், ரகு,எ. ஆறுமுகம், ஜி.கே. குமார், என்.நாகராஜ், பி. கார்த்திக்ராஜா, எஸ்.கார்த்திக்,எஸ். சிவமணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக விஸ்வகர்மா மக்கள் நலச் சங்க பொருளாளர்,பி. சுப்பிரமணியன் நன்றியுரை ஆற்றினார்.
இந்தக் கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- நமது மாநில நிர்வாகி துவரங்குறிச்சி, என்.பழனிவேல் மறைவிற்கு பொதுக்குழுவில் ஆழ்ந்த அஞ்சலி, தமிழக மக்களால் தர்ம சிந்தனையுடைய கேப்டன் விஜயகாந்திற்கு அரசு மரியாதை தந்து, அவரின் புகழிற்கு பெருமை சேர்த்த, தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும், தெரிவித்து கொள்கிறோம்.
- தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மருத்துவ செலவுகளை மனதில் கொண்டு, ரூ.1200- என்பதை, ரூ.3000-ம் ஆக உயர்த்தி வழங்கப்படவேண்டும். உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment