இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 8 January 2024

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மழை, வெள்ள இயற்கைப் பேரிடரால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேராவூரணி ரயில் நிலையம் அருகே  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.கருப்பையா தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் துரை. பன்னீர்செல்வம், சி.வீரமணி, எம்.இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சோ.பாஸ்கர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பா.பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார். 


இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி. ராஜமாணிக்கம், ஆர். ராஜமாணிக்கம், எம். சித்திரவேல், எம். அண்ணாதுரை கிளைச்செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்,  'தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசு கோரிய நிவாரண நிதி ரூ.21,620 கோடியை முழுவதுமாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


- பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்.

No comments:

Post a Comment

Post Top Ad