சைவ ஆதீனங்களில் ஒன்றானதாகவும் இந்தியா சுதந்திரம் அடைய செங்கோல் வழங்கி சிறப்பு செய்த ஆதீனமாக திகழும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை பெருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் அந்த வகையில் இன்று கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது. ஆதீன தலைமை மடத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அன்னக்கொடி ஏற்றப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் சமூகப்பணி, சைவப்பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களுக்கு 5ஆயிரம் பொற்கிழியுடன் சிறப்பு விருதுகளும், பல்வேறு சைவசமய புத்தகங்கள் வெளீயிட்டருளும் நிகழ்வுகளும், விழாவின் முக்கிய நிகழ்வுகளாக நான்காம் நாள் உற்சவமாக வருகிற 12ஆம் தேதி திருஞானசம்பந்தருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு, விழாவின் பிரதான நிகழ்வாக பத்தாம் நாள் உற்சவம் வருகிற 18ஆம் தேதி குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் குருபூஜை பெருவிழாவும் அன்றிரவு பட்டணப்பிரவேச நிகழ்வு மற்றும் சிவஞான கொலுக்காட்சியும் நடக்கிறது.
இவ்விழாவில் பல்வேறு ஆதீன மடங்களை மடாதிபதிகள், ஆன்மீக பெரியோர்கள், அரசுத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment