கஞ்சனூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100க்கும் மேற்ப்பட்ட மகளிர்களுக்கு இலவச தையல் மெஷின் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 9 January 2024

கஞ்சனூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100க்கும் மேற்ப்பட்ட மகளிர்களுக்கு இலவச தையல் மெஷின் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.


தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100க்கும் மேற்ப்பட்ட மகளிர்களுக்கு இலவச தையல் மெஷின் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடந்தது.


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் கஞ்சனூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடந்தது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த ஆறு மாதங்களாக தஞ்சை மாவட்டம் கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர், திருக்கோடிக்காவல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர்களுக்கு தங்களது வாழாவாதாரத்தை முன்னேற்றும் விதத்தில் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது. தையல் பயிற்சி பயின்ற மகளிர்களுக்கு சான்றிதழும், தமிழ் சேவா சங்கம் சார்பில் 101 மகளிர்களுக்கு இலவச தையல் எந்திரத்தை தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் வழங்கினார். 

தொடர்ந்து தமிழகத்தின் முதன் முறையாக கஞ்சனூர் சுற்றுவட்டார கிராம பகுதி பொதுமக்களின் நலனை கருதி இறுதி சடங்கு நிகழ்வுக்கு இலவசமாக பயனடையும் விதத்தில் சமையல் கலைஞர் பாலமுருகன் அவர்களின் பார்வதி பரமசிவம் அறக்கட்டளை சார்பில் இரண்டு சாமியானா பந்தல், 50சேர்கள், குளிர்சாதன பெட்டி, அமரர் ஊர்தி,15குடங்கள் அடங்கிய தொகுப்புகள் அரசு தலைமை கொறடா முன்னிலையில் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், தமிழ் சேவா சங்கம் நிர்வாகி சரவணவேல், பார்வதி பரமசிவம் அறக்கட்டளை நிர்வாகி பாலமுருகன், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதன், திமுக தலைமை கழக பேச்சாளர் உத்திராபதி, கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, தஞ்சை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜா, துணை அமைப்பாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார், ரேவதி பாண்டியன், செல்வி, திமுக ஒன்றிய செயலாளர்கள் மிசா.மனோகரன், அம்பிகாபதி,உதயா ரவிச்சந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் சப்பானி, நசீர், கஞ்சனூர் தங்க நடராஜன்,கருப்பு கருணாநிதி, கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தையில் பயிற்சி ஆசிரியர் லெட்சுமிக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad