கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 40,41,42 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. சுமார் 430 மனுக்கள் பெறப்பட்டது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 6 January 2024

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 40,41,42 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. சுமார் 430 மனுக்கள் பெறப்பட்டது.


கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 3 வார்டுகளுக்கு ஒரு முகாம் என்ற ரீதியில், கடந்த 18ம் தேதி தொடங்கி வருகிற ஜனவரி 06ம் தேதி வரை தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி, கும்பகோணம் மாநகராட்சியின் 40,41,42 ஆகிய வார்டுகளுக்கான முகாம் காந்தியடிகள் சாலையில் உள்ள ராயா மஹாலில் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட சுமார் 430 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன், மேயர் சரவணன், ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் சுரேஷ்குமார், செயற்பொறியாளர் லோகநாதன், மாமன்ற உறுப்பினர்கள் ப்ரீத்தி (40), கீதப்பிரியா விஜி (41), செல்வி அண்ணாதுரை (42) மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலாளர் பிரியம் சசிதரன், பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முருகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அனந்தராமன், மாநகர இலக்கிய அணி துணைத்தலைவர் குவைத் ஸ்ரீதர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று அதற்கு தீர்வு காணும் பணியில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad