தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை எதிரொலியால் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளான முத்தூர் மகா ஜனக்குடி, ஆடுதுறை மணலூர் கஞ்சனூர் கோட்டூர் துகிளி மகாராஜபுரம் திருக்கோடிக்காவல் கதிராமங்கலம் திருப்பனந்தாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா சாகுபடி நெற்பயிர்கள் மழை நீர் தேங்கி பாதிப்படைந்துள்ளது.
வடிகால்கள் தூர்வாரப்படாததால் வடிகால் வாய்க்கால்களிலும் பயிரிடப்பட்ட வயல்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மழை நீரில் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் பருவம் மாறி மழை பெய்து வரும் இது போன்ற காலங்களில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி வசதிகள் மேம்படுத்தி தர வேண்டும் எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தரப்படாமல் உள்ள இன்சூரன்ஸ் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பருவம் மாறி பெய்த மழைநீரில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நோக்குடன் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
No comments:
Post a Comment