நவகிரக கோவில்களில் பிரதானமாகவும் சூரியன் சிறப்பு ஸ்தலமாகவும் இருந்து விளங்கும் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சிவ சூரியனார் கோயிலில் ரத சப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோயிலின் கொடி மரத்திற்கு அருகே சிறப்பு மலர் அலங்காரத்தில் உஷா தேவி பிரதியுக்ஷா தேவி சமேத சிவசூரிய பெருமான், விநாயகர் அஸ்திரதேவர் எழுந்தருள கோயிலின் கொடிமரத்திற்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் தொடர்ந்து குதிரை உருவம் பொறிக்கப்பட்ட அஸ்வ கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ரதசப்தமி பெருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 13 ஆம் தேதி சகோபர காட்சியும் 15ஆம் தேதி திருக்கல்யாண பிரம்மோற்சவமும் .17ஆம் தேதி ரத சப்தமி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும் 18ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் 28ஆம் தேதி கோயிலின் அனைத்து தெய்வங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
நவகிரக கோவில்களில் பிரதானமாக விளங்கும் சிவ சூரியனார் கோயிலில் ரத சப்தமி பெருவிழா கொடி ஏற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment