தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சேர்ந்த மராக்காவலசை ஊராட்சிகுட்பட்ட மராக்காவலசை கிராமத்தில் சுமார் 1.300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மராக் காவலசை கொடிவயல் சாலை .முகைதீன் சாலை 7 வது வார்டு சாலை வங்காளாசாலை. மற்றும் ஆற்றுக்கரை சாலை என அனைத்து சாலைகளும் மிகவும் பழுதடைந்து உள்ளது இந்த சாலைகளை அலடிக்காடு. துறையூர் .காரங்குடா ஆகிய கிராமங்களுக்கு இணைப்புச் சாலையாகவும் பயன்படுகிறது.
இவை அனைத்தும் பேராவூரணி மெயின் சாலையில் இனையக் கூடிய சாலைகள். எனவே மழைக்காலங்களில் இந்தச் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மற்றும் வயதானவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.மராக்காவலசை கொடிவயல் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளம் ஒன்று பழுதடைந்து உள்ளது இக்குளத்திற்கு பளைய தண்ணீரை வெளியேற்றவும் புதிய தண்ணீர் கொண்டு வரவும் வசதியின்றி உள்ளது.
குளத்தின் கிழக்கு பகுதி கரை மிகவும் பழுதடைந்து உள்ளது இதை சரி சய்து தரவும். மற்றும் அனைத்து சாலைகளையும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு தர வேண்டும் என இப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றனர்
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment