ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 28 January 2024

ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், லியோ சங்கம், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகிய இணைந்து  நடத்தும் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து நதி உதவியுடன் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதன்படி நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமில் மொத்தம் 623 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு கண்களில் உள்ள பாதிப்பைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டன.


அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களை நன்கு பரிசோதனை செய்து, பல்வேறு கண் நோய்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்கள். இதில் 405 பேர் தேர்வு செய்யப்பட்டு இன்று 110 பேர் இரண்டு பேருந்துகள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


மீதமுள்ள 295 பேர் புதன்கிழமை அனுப்பப்படுவார்கள். 42  நபர்களுக்கு விலை இல்லா கண்ணாடி வழங்கப்பட்டது, சென்ற மாதம் அறுவை சிகிச்சை செய்தவர்கள் 148 நபர்கள் இந்த மாதம் மீண்டும் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது அதில் 39 நபர்களுக்கு விலை இல்லா கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முகாமில தொண்டாற்றிய அரிமாக்களுக்கும் லியோ பிள்ளைகளுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிதி உதவி செய்து பெயர் குறிப்பிடாமல் முகாம் நடத்தி வரும் குடும்பத்தாருக்கும் வரும் எங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்  என கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad