கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு கும்பகோணம் வட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே பணி தொடர்பாக கூட்டமைப்பு மாநில நிர்வாகிகளுடன் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த கடிதம் அனுப்பி விட்டு மறுபுறம் இந்த பணியை விஏஓக்கள் மீது திணிக்கும் நோக்கில் கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள், தகுதிக்கான பருவம் முடிக்காத விஓஏக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து, மிரட்டும் தொணியில் பணி செய்ய நிர்பந்திக்கும் விதமாக ஊழியர் விரோத போக்கினை கையில் எடுத்துள்ள வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சுரேஷ், தியாகராஜன், சுரேந்திரகுமார், இரா. தியாகராஜன், ஜோதிநாயகம், அருண்குமார், வினோத்குமார், ஆனந்தன், ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment