மேடையின் இந்நிகழ்ச்சிக்கு பேரவைத்தலைவர், சா.இராசமாணிக்கம் தலைமை தாங்கினார், பேரவை பொதுச்செயலாளர், மரு.சேதுராமன் வரவேற்புரை ஆற்றினார், சார்டோனிக்ஸ் தொழில்நுட்பவியல். இயக்குனர்,பி.எம். ஹனிப், தஞ்சாவூர் சார்டோனிக்ஸ் தொழில்நுட்பவியல், திட்ட மேலாளர்,டி. குலோத்துங்கன், பேரவை அமைப்புச் செயலாளர், தஞ்சை. ந.இராமதாசு ஆகியோர்கள் மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார்கள்.
டயாசிஸ் தஞ்சை சொசைட்டி துணைத்தலைவர், அருட்திரு,யு. ஜான் ஜோசப் சுந்தரம், யோகா மனவளக்கலை முதுநிலை பேராசிரியர்,கே. சரவணன், பாஸ்கரபுரம், முனைவர் சலீம், எம்.ஆர். மருத்துவமனை தலைவர்,டாக்டர். ராதிகா மைக்கேல், புனித அந்தோனியார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தாளாளர், அருட்திரு, எம்.இருதயராஜ், புனித அந்தோனியார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை, எ.சகாயம் உள்ளிட்டோர் வாழ்த்துரை. வழங்கினர்.
தஞ்சை அகர்வால் கண் மருத்துவமனை மண்டல தலைமை கண் மருத்துவர்,மரு. டி.சாந்தி, பேரவையின் மாத நாட்காட்டி காலண்டரை வெளியிட்டார், இதில் பேரவை நிர்வாகிகளான: ப.திருமலை, எஸ்தர்தாஸ், பழனிவேல், குருநாதன், துரைராஜன், அறிவழகன், உள்ளிட்டோரும்,விழா குழுவினர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன, இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
இந்தப் பேரவையின் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள்:
- மூத்தகுடி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த, இரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்த மத்திய அரசை இப்பேரவை கேட்டுக் கொள்கின்றது.
- குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில்லாத முதியோர்களுக்கென தஞ்சாவூர் நகரில் அரசு செலவில் ஓய்வு விடுதி ஒன்றினை இலவசமாகவோ, அல்லது குறைந்த கட்டணத்திலோ, ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட நிர்வாகத்தை இப்பேரவை கேட்டுக் கொள்கின்றது.
- அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கென தனிப் பகுதி ஏற்படுத்தி, மருத்துவம் அளித்திட ஏற்பாடு செய்து தருமாறு, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களை இப்பேரவை கேட்டுக் கொள்கின்றது. உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment